Published Date: March 14, 2023
CATEGORY: CONSTITUENCY
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பழனிவேல் ராஜன் பிறந்தநாள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் விழா அமைச்சரது வீட்டு வளாகத்தில் நடந்தது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ. தளபதி ஆகியோ குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். வேலுச்சாமி, குழந்தைவேலு, மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, மிசா பாண்டியன் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Media: Hindu Tamil